கவின் கலை மன்றம்- தமிழ் இலக்கியப் பேரவை


கவின் கலை மன்றம் இலக்கியப் பேரவை சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கவின்கலை மன்றம்- இலக்கியப் பேரவை தொடங்கப்பட்டது. 21/01/2019 திங்கட்கிழமை ஈரோடு மக்கள் சிந்தனை பேரவையின் தலைவர் வழக்கறிஞர் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் தலைமையில் கவின் கலை மன்றம்- தமிழ் இலக்கியப் பேரவை நிகழ்ச்சி நடைபெற்றது. 06/03/ 2020 வெள்ளிக்கிழமை புதுடெல்லி சாகித்திய அகாடமி எழுத்தாளர் முனைவர் கு. கணேசன் அவர்கள் தலைமையில் சிறப்பாக கவின் கலை மன்றம் தமிழ் இலக்கியப் பேரவை நிகழ்ச்சி நடைபெற்றது. 28/12/2021 செவ்வாய்க்கிழமை கோபி சாரதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் முனைவர் நீ வா கருப்புசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கவின் கலை மன்ற விழா நடைபெற்றது. 21/4/2023 வெள்ளிக்கிழமை தாளவாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் வே ராமசுப்பிரமணியன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கல் விளையாட்டு விழா கவின் கலை மன்ற விழா மற்றும் மாணவர் பேரவை விழா கல்லூரியின் ஆண்டு விழாவாக முப்பெரும் விழாவாக நடைபெற்றது. தமிழ்த்துறை கௌரவ விரிவுரையாளர்கள் முனைவர் .எண்ணம்மங்கலம் அ.பழநிசாமி திரு .கே. என் .சரவணபவ ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக விளங்கி வருகின்றனர். மாணாக்கர்களின் தனித் திறன் மேம்பாட்டை வளர்ப்பது, படைப்பாற்றல் திறனை ஊக்குவிப்பது, ஆளுமையில் சிறந்து விளங்க வைப்பது, மொழிப் பற்றையும், தமிழ் இலக்கிய வளம் குறித்த சிந்தனைகளையும் கவின் கலை மன்றம் தனது செயல்பாட்டின் மூலமாக நிலைநாட்டி வருகிறது.