மனித இனத்தின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு மொழியாகும். உலகில் பல மொழிகளுக்குத் தாய் மொழியாக அமைந்தது நம் தமிழ்மொழி. சங்கம் வைத்து மொழி வளா்த்த செந்தமிழ் நிலம் இன்றைய நவீன உலகில் இணையத்திலும் தனக்கென தனி இடம் பெற்றுள்ளது.
மொழிவளமே மனித வளம் என்ற அடிப்படையில் ஊடகம், அரசு நிர்வாகம், பள்ளி, கல்லூரிகள், வாணிபம், இணையம் போன்ற அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்பிற்கான அடிப்படையாக அமைவது தமிழ்மொழி அறிவு ஆகும். அவ்வகையில் அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் அடிப்படை தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள், மொழி அறிவு, இலக்கிய வடிவங்கள், இலக்கியக் கொள்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இளநிலை அடிப்படைத் தாள்களைக் கற்பிக்கும் துறையாக தமிழ்த் துறை விளங்குகிறது.