National Service Scheme (NSS)


 நமது கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டமானது கல்லூரி ஆரம்பித்த வருடத்தில் 2016 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் 100 மாணாக்கர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு களப்பணி ஆற்றி வருகிறார்கள். தற்போது கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் கணிதவியல் துறையின் உதவி பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் முனைவர் .மா. ராமச்சந்திரன் அவர்கள் தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
 நாட்டு நலப்பணி திட்ட உறுப்பினர்களாக சேர்க்கை பெற்ற மாணாக்கர்கள் இரண்டு வருடங்கள் வழக்கமான களப்பணிகளையும், ஒருமுறை சிறப்பு முகாமிலும் கலந்து கொண்டு சிறந்த முறையில் சேவை செய்து சான்றிதழ் பெறுகிறார்கள்.
 வழக்கமான பணிகளாக கல்லூரி வளாகத் தூய்மை, மரக்கன்று நடுதல், அருகில் உள்ள கிராமப்புறங்களில் சேவை பணியாற்றுதல், யோகா பயிற்சி மேற்கொள்ளுதல், போன்ற பல அரிய பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். வருடம் தோறும் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் அருகில் உள்ள கிராமங்களில் 7 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். 2016-17ஆம் ஆண்டு கல்வி ஆண்டில், பங்களாபுதூர் கிராமத்திலும், 2017-18 ஆம் கல்வி ஆண்டில் சிக்கரசம்பாளையத்திலும், 2018-19 ஆம் கல்வி ஆண்டில் பவானிசாகர் பேரூராட்சி பகுதியிலும், கடந்த  2021-22 ஆம் கல்வியாண்டில் குமாரபாளையம் பஞ்சாயத்தில் அமைந்துள்ள   இந்திரா நகர்     பகுதிகளிலும் சிறப்பு முகாம் இனிதே நடைபெற்றது..
ஒவ்வொரு வருடமும் சிறப்பு முகாமில் சுமார் 50 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு சமூக பணி ஆற்றி வருகிறார்கள். சிறப்பு முகாமில் கலந்து கொண்ட மாணவ ,மாணவியர்கள் அனைவருக்கும் கல்லூரி முதல்வர் முனைவர் .கா. ராதாகிருஷ்ணன் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள்.

நாட்டுநலப்பணி திட்ட முகாம் சார்பான புகைப்படங்கள்
Click here